உற்பத்தி பொருளாதாரம் மூலம் தன்னிறைவுகொண்ட நாட்டை கட்டியெழுப்பும் இலக்கை நோக்கி செயற்படுங்கள் – துறைசார் அதிகாரிகளிடம் கமத்தொழில் அமைச்சர் வலியுறுத்து!

உற்பத்தி பொருளாதாரம் மூலம் வளமான மற்றும் தன்னிறைவுகொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கான இலக்கை நோக்கி செயற்படுமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கமத்தொழில் அமைச்சு மற்றும் அமைச்சுக்கு உட்பட்ட நிறுவனங்களின் மாதாந்த முன்னேற்ற மீள் ஆய்வுக் கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த கூட்டத்தில் கமத்தொழில் தொடர்பான 10 முக்கிய நிறுவனங்களின் 2021 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அத்துடன் விவசாய சேவைகள் திணைக்களம், நெல் சந்தைப்படுத்தல் சபை, தேசிய அறுவடை மேலாண்மை நிறுவனம், தேசிய உரச் செயலகம், கொப்பேகொட விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம், சிறு தோட்ட உரிமையாளர்களின் விவசாய பங்குடமை வேலைத்திட்டம், நட்டிற்கு பொருத்தமான நீர்பாசன திட்டம், பொருளாதார மத்திய நிலையம் போன்றவற்றின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டடுள்ளது.
அத்துடன் 16 பயிர்களில் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் பிரதான திட்டதிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கமத்தொழில் அமைச்சர் இதன்போது வேண்டுகொள் விடுத்துள்ளார்..
மேலும் உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம் போன்றவற்றின் இறக்குமதிக்காக செலவிடப்படும் பெருந்தொகை பணத்தை சேமிப்பதன் மூலம் நாட்டையும் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்க முடியும் என்றும், அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம். விதை உருளைக்கிழங்கு, விதை மிளகாய் மற்றும் நாட்டின் உற்பத்திக்கு தேவையான பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் துல்லியமான புள்ளிவிவரங்கள், தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அனைத்து நிறுவனங்களும் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்க முறையான நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் மோகன் டி சில்வா, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா, அரச அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|