உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு!
Saturday, January 1st, 2022
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நிதி அமைச்சரின் அங்கீகாரத்துடன் சந்தையில் தற்போதைய விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு 215 தமிழர் தகுதி!
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கக வாய்ப்பு - ல...
|
|
|


