உரிய நேரத்திற்கு முன்னர் பயணம் : 1 கோடியே, 17 இலட்சம் ரூபாய் நஷ்டம்!
 Thursday, August 16th, 2018
        
                    Thursday, August 16th, 2018
            இலங்கையிலிருந்து பிரானஸ் நோக்கி புறப்படவிருந்த விமானமொன்று உரிய நேரத்திற்கு முன்னர் பயணமானதால் ஸ்ரீலங்கன் விமா சேவைக்கு 1 கோடியே, 17 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிஷாந்த விக்ரமசிங்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 128 பேரின் பயணம் பாதிக்கப்பட்டதுடன், நிறுவனத்தின் மீதான நம்பிக்கைக்கும் சவால்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின்லங்கா வானூர்தி சேவை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், நேற்றைய தினம் இது தொடர்பான விசாரணையொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        