உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் – மின்சார ஊழியர்கள்!
 Wednesday, September 20th, 2017
        
                    Wednesday, September 20th, 2017
            மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளைய தினம் மின்வலு அமைச்சு முற்றுகையிடப்படும் என்று மின்சார சபை ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை கைவிடச் செய்வது தொடர்பில் நேற்று முன்தினம் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடன் ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு அனைவரும் கடமைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.எனினும், ஊதிய உயர்வு தொடர்பான எழுத்து மூல அறிவித்தலை இன்றைக்கு நண்பகலுக்குள் வெளியிட வேண்டும் என்றும் அவ்வாறின்றேல் நாளைய தினம் மின்வலு அமைச்சு முற்றுகையிடப்படும் என்றும் மின்சார சபை ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
Related posts:
360 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்துவிட்டு ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்ற...
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதம்!
இன்று நள்ளிரவுடன்  நிறைவுக்கு வருகின்றது 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        