உரிய தீர்மானம் எடுக்கப்படும் – பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால!
Thursday, September 28th, 2017
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது.
தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்கீழ் கட்டளை மீதான விவாதம் ஆரம்பமானது.இதில் உரையாற்றிய தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்திலிருந்து 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்னமும் அகற்றபடவில்லை. இது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்குப் பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் மேற்கண்ட பதிலை வழங்கியுள்ளார்.20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற ஒழுக்கப்பத்திரத்திலிருந்து அகற்றுவதா? இல்லையா? என்று அரசே தீர்மானிக்கும். எதிர்க்கட்சிகள் அரசின் நிகழ்ச்சி நிரலை எவ்வாறு தீர்மானிக்க முடியும்?ஒழுங்குப்பத்திரத்திலுள்ள 20ஆவது திருத்தத்தால் உங்களுக்கு (எதிரணிக்கு) எங்கு வலிக்கின்றது? எதிர்க்காலத்தில் குறித்த சட்டமூலம் தொடர்பில் நாங்கள் நடவடிக்கையெடுப்போம் என்று அவர் மேலும் கூறினார்.
Related posts:
|
|
|


