உரிய காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் – குறிப்பிட்ட பொதுத் தேர்தலும் நடத்தப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
Tuesday, February 13th, 2024
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
மேலும் இதற்கான நிதி 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேவேளை .பொதுத் தேர்தலுக்கு 2025 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
“மாஸ்க்” அணியாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ....
இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - வர்த்தக அமைச்சர் பந்துல ...
விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


