உரப்பற்றாக்குறைக்கு அரச அதிகாரிகளின் தவறே காரணம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு!

Tuesday, December 27th, 2022

அரச அதிகாரிகள் விவசாயிகளிடம் உரம் பற்றாக்குறையாக இருப்பதாக கூறுவதனால் அரசாங்கத்திற்கே அபகீர்த்தி ஏற்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உரங்களின் இருப்பு தொடர்பில் ஆராய்வதற்காக களஞ்சியங்களுக்கு விஜயம் செய்த போதே அவர் செய்தியாளர்கள் மத்தியில் இந்த கருத்தை வெளியிட்டார்.

விவசாயத்திற்கு தேவையான உரம் முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா என்று களஞ்சியங்கள் மற்றும் ஆவணங்களை பரிசோதித்த போது எனக்கு உண்மை நிலவரம் தெரியவந்தது.

விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் தமக்கு உரம் கிடைக்கவில்லை என்று விவசாயிகளிடம் கூறியுள்ளனர். இது தொடர்பில் விவசாய அமைப்புகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தன.

இதன்படி ஆவணங்களை பரீட்சித்த போது அனைத்து பகுதிகளுக்கும் தேவையான உரம் விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

உரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமானால் துறைசார்ந்த அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணமாக இருக்க முடியும். எனவே, குறித்த அதிகாரிகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கம் எந்தளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டாலும் விவசாயிகளுக்குரிய பிரதிபலன் கிடைக்காத பட்சத்தில் அதில் எந்தவித பயனும் இல்லை.

பிரதேச ரீதியாக விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யாத அதிகாரிகள் தமது அரச கருமங்களில் தவறிழைப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

00

Related posts: