சாலாவ இராணுவ முகாம் தீ விபத்து: சேத விபரங்கள் மதிப்பீடு நிறைவு!

Sunday, June 12th, 2016
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயால் சேதமடைந்த 347 வீடுகள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான சேத விபரங்கள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 307 கட்டடஙகள் தொடர்பில் சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.

மதீப்பீட்டு நடவடிக்கைகளுக்காக 76 உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபடுதப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 2 தினங்களுக்குள் சாலாவ பகுதியில் சேதமடைந்த கட்டடங்கள் தொடர்பான மதீப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை, நாளை மறுதினம் (14) ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவிக்கின்றார்.

அத்துடன் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக சாலாவையை அண்மித்துள்ள பகுதிகளில்
12 நிலையங்கள் அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தீயால் சேதமடைந்த 94 வீடுகளின் கூறைகளை திருத்தும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 40 வீடுகளின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தீயால் இடம்பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக கூடாரங்களை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: