உரத்திற்குத் தட்டுப்பாடு – வடக்கு விவசாயிகள் கவலை!
Thursday, November 29th, 2018
வடக்கு மாகாண விவசாயிகளுக்கு பெரும்போக செய்கைக்கு தேவையான உரம் இந்தமுறை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான சந்தர்ப்பத்தில் விவசாய மத்திய நிலையத்தின் ஊடாக தமக்கான உரம் கிடைக்காமை காரணமாக, தாம் தனியார் சந்தைகளில் அவற்றை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடல் பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று மழை காரணமாக உரத்தை ஏற்றிவரும் கப்பலின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
Related posts:
தொடரும் காலநிலை சீர்கேட்டின் எதிரொலி - மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு - நுகர்வோர் கவலை!
மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு!
லாஃப் மற்றும் லிட்ரோ எரிவாயு விலைகள் சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்...
|
|
|


