உரங்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை!
Sunday, September 10th, 2023
உரங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையின்றி போதுமான தொகையினை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து அங்கீகாரம் பெற்ற உர இறக்குமதியாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெரும்போகத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உர மானியத்துக்கு பதிலாக நிதி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு அவற்றை மானியமாக வழங்கும் செயற்பாட்டிலிருந்து தாம் விலகியுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
பொருளாதார நெருக்கடி - வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்தியவங்கி நடவடிக்கை!
அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பெருந்தொகை பணம் - சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி...
|
|
|


