உரங்களை கொள்வனவு செய்வதற்கு 16,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Monday, January 30th, 2023
2022/23 பொரும்போகத்திற்காக உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 16,000 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், உரங்களை கொள்வனவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பூரண ஆதரவை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க பிரதி நிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உரங்களை விநியோகிப்பதற்காக தீவின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக மாவட்டக் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்தியாவிடமிருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய திட்டம் ...
மதிய உணவுக்காக மாணவி ஒருவர் தேங்காய் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை - ஜனாதிபதி ஊடகப்ப...
அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவு - மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது பயங்கரவாத எதி...
|
|
|


