உயிர் மீது ஆசை இருந்தால் வீட்டில் தங்கியிருங்கள் – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அறிவுறுத்து!
Monday, August 16th, 2021
நாட்டில் தற்போது சுகாதார பிரிவின் கொள்ளளவு அதன் திறனைத் தாண்டிவிட்டது என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாட்டை மீண்டும் முடக்குமாறு அரசாங்கத்தைக் கேட்க மாட்டேன் என்றும் நாட்டின் நிலைமைகளைப் புரிந்துகொண்டு சுய பயணக் கட்டுப்பாடுகளை தங்களுக்கு விதிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் உயிர் மீது ஆசை இருந்தால் வீட்டில் தங்கியிருக்குமாறு கடுமையாக வலியுறுத்து வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களை இழந்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விசாரணை ஆணைக்குழுவுக்கு வெளி நபர்ககளை நியமிக்க யோசனை?
மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார இலக்குகளை அடைவதற்கு அனைத்து சக்தியையும் அர்ப்பணிக்க தயார் – ஜனாதிபதி...
யுக்ரைன் - ரஷ்யாவின் இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!
|
|
|


