உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு!

Sunday, April 4th, 2021

உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் மற்றும் பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும், தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பினை மேலும் அதிகரிக்குமாறும் சகல பாதுகாப்பு தளபதிகளுக்கும் அந்த அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் சிவில் குழுக்களின் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏதேனும், சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் உடனடியாக உரிய தரப்பினருக்கு அறியப்படுத்துமாறு, ஆராதனைகளில் கலந்துக்கொள்வோர் மற்றும் தேவாலயங்களில் நியமிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குழுவிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இன்றையதினம் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 12 ஆயிரத்து 47 உறுப்பினர்கள் கடமைகளில் ஈடுப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் சகல தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


ஒன்றுபட்ட தேசமாக, பல்லின, பாலின பரஸ்பரம் கலாசார சமய மரபுகளை மதித்து இணக்கமாக வாழும் தேசமே எமக்குத் த...
எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் – ஜனாதிபதி ...
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் ச...