உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – எவரும் தப்பமுடியாது – நிச்சயம் நீதி கிடைக்கும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதியளிப்பு!
Wednesday, April 19th, 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் எவரும் தப்பமுடியாதென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு எழுப்பபட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் சம்பத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகளில் கத்தோலிக்க திருச்சபை திருப்தியடையவில்லை என்றாலும், இது தொடர்பாக பல நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தாக்குதல் சம்பவத்தின் போது கடமையை புறக்கணித்த அதிகாரிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
தாக்குதல் இடம்பெற்ற போது சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆயர்கள் மாநாட்டில் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


