உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 160 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

Thursday, May 30th, 2019

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய தொகை காயமடைந்த 193 பேருக்காக வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts: