உயர் நீதிமன்ற நீதியரசர் உட்பட மூவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
 Monday, February 6th, 2023
        
                    Monday, February 6th, 2023
            
உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.பி. பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன், மேல்நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர். மரிக்கார், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாவ மன்னிப்புக் கோரிய போப் ஆண்டவர்!
நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு கிடையாது - 75 ஆயிரம் மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அ...
பலவீனங்களைக் களைந்து இந்த ஆண்டில் இலாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் -இலங்கைப் போக்குவரத்துச் சபையிடம்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        