உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசி – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Friday, July 2nd, 2021
உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு பயணமாகவுள்ள மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கல்வி நோக்கத்துக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தேவையுள்ள மாணவர்கள் இன்றுமுதல் அதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழியாக இந்த முன்பதிவுகளை மேற்கொண்டதன் பின்னர், தடுப்பூசி செலுத்தப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் என்பன குறுந்தகவல் ஊடாக குறித்த மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
அதற்கமைய, பின்வரும் இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் ஊடாக, உயர்க் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


