உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரல்!

Wednesday, June 5th, 2024

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளன.

இன்று (05) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை பரீட்சாத்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலைப் பரீட்சாத்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: