உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க 15ஆம் திகதி இறுதிநாள்!
Thursday, February 9th, 2017
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 15ம் திகதிக்கு பின்னர் முன்வைக்கப்படும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்கப்பட மாட்டாது என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 23ம் திகதி உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 8ம் திகதி முதல் செப்டம்பர் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
உத்தரவாதப் பத்திரம் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்! வர்த்தமானி அறிவித்தல்
அரசியல் கட்சிகளிடம் பொது நிலைப்பாடொன்று இல்லை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
சர்ச்சைக்குரிய கருத்து - இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த பதவியில் இருந்து இராஜினாமா!
|
|
|


