உண்மையான ஜனநாயகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த தேசப்பிரிய

Sunday, June 4th, 2017

பெரும்பான்மையினரின் விருப்பங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத நிலையே உண்மையான ஜனநாயகம் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஏனையவர்களை நூற்றுக்கு நூறு வீதம் மகிழ்ச்சிப்படுத்த முடியாவிட்டாலும், பெரும்பான்மை யானவர்களின்  கருத்தை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்க கூடாது.ஏனையவர்களின் கருத்துக்களை செவிமடுத்து, அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்

Related posts: