உண்மைக்கு புறம்பான செய்திகளை சில இணைத்தளங்கள் வெளியிட்டு வருகின்றன –  சுகாதார அமைச்சு!

Monday, May 8th, 2017

சுகாதார சேவைக்கு பங்கம் ஏற்படும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் தொடர்பில் சுகாதார துறை அமைச்சு குற்றத்தடுப்பு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.

இரவு வேளையில் இரத்த பரிசோதனைக்காக வருகை தரும் அதிகாரிகள் குழுவொன்று மக்கள் மத்தியில் பரிசோதனை என்ற பேரில் எச்.ஐ.வி., எயிட்ஸ் வைரஸை பரப்பி வருவதாக உண்மைக்கு புறம்பான செய்திகளை சில இணைத்தளங்கள் வெளியிட்டு வருகின்றன.

இதனால் யானைக்கால் போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுச் சேவையை மேற்கொண்டு வரும் பொது சுகாதார அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அறிவிக்கப்படுகிறது.

சில ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் விசேட சலுகைகள் மற்றும் வசதிகள் இல்லாமல் போய்விடுகின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உச்சளவில் சேவைகளை வழங்க அர்ப்பணிபுடன் செயற்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts: