உணவில் விஷத்தன்மை – 100 க்கும் மேற்பட்ட ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கொக்கல ஏற்றுமதி செயலாக்க வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள், உணவு விஷமானதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்காக நேற்று (02) இரவு இடம்பெற்ற மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 114 எனவும் அவர்கள் அனைவரும் பெண்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் 30 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஒன்பது மாதங்களில் 283 புதிய இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் - உயர்மட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை!
இலங்கை வந்தள்ள சீன மக்களுக்கு சீன தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!
பசுமை விவசாயம் - 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதியால் நியமனம்!
|
|