உடல் உறுப்பு வர்த்தகத்தில் ஈடுபட்ட குழு கைது!
Wednesday, April 3rd, 2019
இலங்கை, எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளை மையப்படுத்தி இந்தியாவில் செயற்பட்ட மனித உடல் உறுப்பு சட்டவிரோத வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்ட குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராச்சகொண்ட பகுதியில் இந்த குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதாகியுள்ளனர்.
இந்தியாவில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை ஏமாற்றி அவர்களின் சிறுநீரகத்தொகுதி உள்ளிட்ட முக்கிய அவயங்கள் சிலவற்றை அபகரித்து பணம் பெற்றுக் கொள்ளும் தொழிலை இந்த குழுவினர் நீண்டகாலமாக மேற்கொண்டுவந்துள்ளது.
அண்மையில் இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர் ஒருவரின் சிறுநீரகத்தொகுதி களவாடப்பட்டு அவர் பணமோசடிக்கு உள்ளானதை அடுத்து, அவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புதுடெல்லியின் குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
அதன் அடிப்படையிலேயே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவினர் இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் சம்மந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Related posts:
|
|
|


