உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Thursday, May 18th, 2023
வடக்கு, வட கிழக்கு, வட மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில், உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள திணைக்களம் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதுமானளவு நீரை அருந்துமாறும், இயலுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இயலுமானவரை வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் ஜனவரியில் ஆரம்பம் - மின்சக்தி அமைச்சர் டல...
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில் அதிகரிக்கப்படவில்லை - கல்வி அமைச்சர் பேராசிரி...
'வடக்கின் ஒளிமயம்' யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு ஆரம்பம்!
|
|
|


