உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல் – நாடுமுழுதும் அவசர கால சட்டம் பிரகடனம் – பிரதமர் ரணில் விக்கரிமசிங்க உத்தரவு!
Wednesday, July 13th, 2022
உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு, பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் அவசார சட்டம் அமுலப்படுத்தப்படுவதாகவும் பதில் பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி, பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்யுமாறும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்
முன்பதாககொழும்பு – கொள்ளுப்பிட்டி – ஃப்ளவர் வீதியில், பிரதமர் காரியாலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளது.
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள், இன்று முற்பகல் பிரதமர் காரியாலயம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதையடுத்து, பிரதமர் காரியாலத்திற்குள் பிரவேசிக்க அவர்கள் முயற்சித்துள்ளனர். இதன்போது, அவர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப்புகை மறறும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


