உடன் அமுலுக்குவரும் வகையில் கப்பலில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டவர்கள் இலங்கை வர தடை – ஜனாதிபதி அறிவிப்பு!

Thursday, June 25th, 2020

இலங்கை கடற்பரப்பில் கப்பலில் பணியாற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருவதற்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார்.

கப்பல் பணியாளர்களான வெளிநாட்டவர்கள் வரும் செயற்பாட்டினை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்துமாறும்  ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளர்.

அவ்வாறு வரும் வெளிநாட்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவிலானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த நாட்களாக அவ்வாறு வந்தவர்கள் பலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: