உடன் அமுலாகும் வகையில்7 வரிகள் நீக்கம் !
Thursday, November 28th, 2019
பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக அறிவிடப்படும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, பங்குச் சந்தை இலாப வரி, வட்டி பிடிமான வரி, கடன் சேவை வரி, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் பற்று வரி உள்ளிட்ட 7 வரிகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக 15 சதவீதமாக அறிவிடப்படும் வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை 8 சதவீதம் வரை குறைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நிர்மாணத்துறைக்காக 28 சதவீதமாக அறிவிடப்பட்ட வருமான வரி 14 சதவீதம் வரையிலும், தொலைத்தொடர்புகள் வரி 25 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் செலாவணியும், வருமான வரியிலிருந்து முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Related posts:
பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு!
சட்டவிரோத மணல் அகழ்வு: மதில் இடிந்துவிழுந்து அரியாலையில் ஒருவர் பலி!
கடலரிப்புக்கு உரிய தீர்வினை பெற்றுத்தாருங்கள் - சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம...
|
|
|
அனைத்தையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது எளிதானது - அதனால் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக...
வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி பணிப்புரை வி...
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின்...


