உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் எரிவாயு நிறுவனத்திடம் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வேண்டுகோள்!
Sunday, June 19th, 2022
இலங்கையில் எரிவாயுவிற்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் எரிவாயு நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓமானிலிருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல்கள் அண்மையில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த ஒப்பந்த நடவடிக்கைக்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு அந்நிறுவனத்திடம் கோரியுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கைக்கு அடுத்து வரும் எரிவாயு கப்பல்கள் தொடர்பில் நாளைய தினம் (20-06-2022) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் இலங்கையில் இரண்டு எரிவாயுக் கலன்களை கையகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள், தகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக கப்பலில் இறுதியாக இறக்கப்பட்ட எரிவாயு கையளிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


