“உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்ப்பு – பிரதமர் அறிவிப்பு!

Tuesday, December 7th, 2021

கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் “உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செலவின தலைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாம் இதுவரை 21 நகர அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்துள்ளோம். மேலும் 52 நகர திட்டங்கள் நிறைவடையும் தருணத்தில் உள்ளன. அத்துடன் 2024 ஆம் ஆண்டளவில் மேலும் 136 நகர அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்.

பின்தங்கிய நகரங்களின் மேம்பாடு மற்றும் அழகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நூறு நகரங்கள்டு திட்டத்தின் கீழ் 117 நகரங்கள் அழகுபடுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 நகரங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக 12 வாகன நிறுத்தங்களை நிர்மாணிக்கும் திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் சகல வசதிகளுடன் கூடிய வீடொன்றை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் கீழ் நகர, கிராம, தோட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கும் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

நகர்ப்புற குறைந்த வசதிகளை கொண்ட மக்களுக்காக 2024 ஆம் ஆண்டளவில் 50,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கிறோம். அதற்கமைய தற்போது 14,083 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மக்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய 2024 ஆம் ஆண்டளவில் கொழும்பு பிரதேசத்தில் காணப்படும் குறைந்த வசதிகளை கொண்ட மக்கள் குடியிருப்புகளை நவீன தொடர்மாடிக் குடியிருப்புகளாக மாற்றுவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நடுத்தர வர்க்கத்தினருக்காக 1108 வீடுகளை 2021ஆம் ஆண்டில் பயனாளர்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 13 வீட்டுத் திட்டங்களின் ஊடாக 6128 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்காக இந்திய நிதி உதவியின் கீழ் 4000 வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடிந்துள்ளது.

2022 ஆம் ஆண்டுமுதல் தோட்ட மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய நிதி உதவி திட்டமும் ஆரம்பிக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க வேண்டும்.

சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்காக கடற்கரைப் பாதுகாப்பு மற்றும் கடற்கரை பூங்காக்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், நாட்டை சூழவுள்ள சமுத்திர சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பிலும் நாம் தொடர்ந்;து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: