ஈ.பி.டி.பி நிதி ஒதுக்கீடு : வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளிநிலா மைதானப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
Friday, August 3rd, 2018
வடமராட்சி கிழக்கு முள்ளியான் – கேவில் பிரதேச வெள்ளிநிலா விளையாட்டுக் கழக மைதான புனரமைப்புப் பணிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் செபமாலை செபஸ்ரியன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது கேவில் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த பகுதி மக்கள் வெள்ளிநிலா மைதான புனரமைப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
மக்களது கோரிக்கைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அன்றையதினம் கொடுத்த வாக்குறுதிக்கமைவாக தனது 2018ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவை குறித்த மைதான புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதன்பிரகாரம் நிதி நிலாவெளி விளையாட்டு கழகத்தினருக்கு அந்நிதி வழங்கப்பட்டதை அடுத்து குறித்த மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


