ஈ.பி.டி.பியின் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் பவானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Monday, July 1st, 2024

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச நிர்வாக செயலாளர் சரவணபவானந்தன் சிவகுமார் (பவானி) சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

முன்பதாக கடந்த 2024.06.20 திகதி அன்று இரவு 09 மணியளவில் வத்திராயன் வடக்கு வேம்படி பகுதியில் உள்ள தனது மீனவர் வாடியில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த போது இவர் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார்

பின்னர் அவரது உடலில் ஏற்பட்டிருந்த எரிகாயங்களின் தாக்கம் அதிகளவாக இருந்தமையை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விசேட சிகிசசைக்காக கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இவர்மீதான தாக்குதல் பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பலரம் தெரிவிக்கின்ற நிலையில்   நேற்று 2024.06.30 முன்னிரவு 9.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் இவர் சட்ட விரோத கடற்தொழில் தொடர்பாக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: