ஈ.பி.ஆர்.எல்.எப் நாபாஅணியினரின் தேசிய மகாநாட்டை வரவேற்கின்றோம்.
Thursday, March 31st, 2016
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (நாபாஅணி) தேசியமகாநாட்டை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது.
அந்தமகாநாடு வெற்றிகரமாகவும்,எழுச்சியோடும் நடைபெற ஈ.பி.ஆர்.எல்.எ.ப் தோழர்கள் உறுதியுடன் உழைப்பார்கள் என்றும் நம்புகின்றோம்.
ஈ.பி.ஆர்.எல்.எ.ப் ( நாபாஅணி) இன் தேசிய மகாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தோழமையோடு அழைப்புவிடுத்திருப்பதையிட்டு மகிழ்ச்சிகொள்கின்றோம்.
அந்த அழைப்பைஏற்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக கட்சியின் பிரதிநிதிகளாக இருவர்பங்கேற்பார்கள் என்றும் எமது ஆசிச் செய்தியையும் மகாநாட்டில் சமர்ப்பிப்பார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்று இரண்டாம் தவணைக்காக பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பம்
மூன்று கட்டளைச் சட்டமூலங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு!
போதைப்பொருளுக்கு அடிமையான மேலுமொரு இளைஞர் உயிரிழப்பு - பாடசாலை மாணவர்கள் சிலரும் போதைப்பொருளுடன் கைத...
|
|
|


