ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் காரைநகரில் வீதி மின்குமிழ் பொருத்தல்!
Tuesday, August 7th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் காரைநகர் பிரதேச மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் வீரமுத்து கண்ணனின் பிரதேச சபை நிதி ஒதுக்கிட்டின் மூலம் வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக காரைநகரின் பல வீதிகள் வீதி மின்குமிழ்கள் இன்றி இருளில் காணப்படுவதால் அவ்வீதிகளில் செல்லும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டவந்திருந்தனர்.
இதன் காரணமாக தமது பாதுகாப்பு கருதி தமது வீதிகளில் மின் குமிழ்களை பொருத்தித்தருமாறு குறித்த பகுதி மக்கள் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களது அசௌகரியங்களை கருத்தில் கொண்ட வீரமுத்து கண்ணன் தனது பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த பிரதேசத்தின் பல பகதிகளிலுமுள்ள வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
|
|
|


