ஈரான் – இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி திட்டம்!

Friday, July 2nd, 2021

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த ஈரான் அரசிடமிருந்து தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியைப் பெறுவதற்காக, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஈரான் தூதரகத்தின் அரசியல் விவகாரத் தலைவர் அயோப் ஹெய்தரீ ஆகியோர் 29 ஆம் திகதி அமைச்சக வளாகத்தில் கலந்துரையாடினர்.

இதன்போது நாட்டின் மின்சார விநியோகத்தில் 100 மெகாவோட் திறன் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் அனைத்து இலங்கை சூரிய மின் திட்டத்தில் முதலீடு செய்ய வேலை ஹெய்தரீ ஒப்புக்கொண்டுள்ளார்.

ஈரான் அரசாங்கத்தின் நன்கொடையாக இலங்கையின் ஏரிகள் மற்றும் தடாகங்களுக்கு அருகே மிதக்கும் சூரிய மின் நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டத்தைத் ஆரம்பிக்க ஈரான்  திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் அயோப் ஹெய்தரீ தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் பொது மற்றும் தனியார் தொழில்முனைவோருடன் இணைந்து ஆறு சிறு நீர்மின் நிலையங்களைக் கட்டும் திட்டத்தை செயல்படுத்த ஈரான் கவனம் செலுத்துவதாக ஹைதரி மேலும் கூறியுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையில் மத்திய கிழக்கில் முன்னணி நாடுகளில் ஈரான் ஒன்றாகும். கடந்த காலங்களில் இருந்த ஈரான்-இலங்கை நட்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று அமைச்சர் துமிந்த திசானநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: