இ.போ.சபையுடன் இணைகின்றன கங்கேரியப் பேருந்துகள்!
Wednesday, August 1st, 2018
இலங்கை போக்குவரத்துச் சபையில் ஹங்கேரிய நாட்டின் தயாரிப்பிலான பேருந்துகள் இணையவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கேரியாவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் இலங்கை போக்குவரத்துச் சபை இணைந்து கூட்டு முயற்சியாகவே கைபிரைட் என்று அழைக்கப்படும் டீசல் மற்றும் மின்கல சக்திகள் இணைந்து இந்தப் பேருந்துகளை இயக்கும்.
தனியாக மின்சக்தியில் மட்டுமே இயக்கக்கூடிய பேருந்துகளையும் இறக்குமதி செய்யவுள்ளோம் என்று போக்குவரத்துத் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தினூடாக இலங்கைக்குச் செலவுகள் எதுவுமே இல்லை. திட்டத்தின் 85 வீதமான இலாபம் ஹங்கேரியாவுக்கும் 15 வீதம் இலங்கைக்கும் கிடைக்கும். இந்த 15 வீதம் என்பது இலங்கைக்கு எதுவித முதலீடும் இல்லாமல் 100 வீத இலாபமாகவே கிடைக்கவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சின் செயலாளர் விதானகே தெரிவித்துள்ளார்.
ஒரு மின்சாரப் பேருந்தின் விலை 50 மில்லியன் ரூபாவாகவும் கைபிரிட் பேருந்து 30 மில்லியன் ரூபாவாகவும் அமைந்துள்ளன. இந்தப் பேருந்துகளுக்கான தரிப்பிட வசதி, பராமரிக்கும் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை கங்கேரியாவின் தொழில்நுட்பவியலாளர்களே இந்த வாகனங்களைப் பராமரிப்பார்கள்.
இலங்கையர்களே இந்தப் பேருந்துகளின் சாரதிகளாகப் பயிற்றப்படுவார்கள். தற்போதைக்கு 750 கைபிரட் பேருந்துகளும் 250 மின்சார பேருந்துகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இந்தப் பேருந்துகளில் அதிகமானவை மேல் மாகாணத்தின் முக்கிய நகரங்களிலும் அதிவேகப் பாதையிலும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமல்சிறிவர்த்தன தெரிவித்தார். இந்தப் பேருந்துகளில் சில வெளியூர் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


