இ.போ.சபைக்கு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, March 28th, 2019
இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இதுதொடர்பாக தாக்கல் செய்த பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவையை விஸ்தரித்தல் மற்றும் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மலையகத்திற்கான சேவையில் ஈடுபடும் புகையிரதங்களுக்கான 75 பயணிகள் பெட்டிகளையும் 20 சரக்கு பெட்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
விசாரணை தொடர்பான தகவல்களை வெளியிடத் தடை!
5 வருடங்களில் யாழில் குடிநீர் இல்லாது போகும் கடலில் மூழ்கும் அபாயம்!
"உங்களின் பாதுகாப்பிற்காக நாம்" – யழ்ப்பாணத்தில் பொலிசாரால் முன்னெடுப்பு!
|
|
|


