இஷட் புள்ளி இன்றையதினம் இணையத்தளத்தில் வெளியாகும் – பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர உயர் பரீட்சைக்கான இஷட் புள்ளி இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளது.
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இஷட் புள்ளி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையபக்கமான www.ugc.ac.lk யில் இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.
இந்த முறை 41 ஆயிரத்து 500 மாணவர்களை அரச பல்கலைகழகங்களில் இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட விசேட துறைகளுக்கு இணைத்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று உள்ளிட்ட சில காரணிகளால் ஸ்செட் புள்ளியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|