இவ்வாண்டு இறுதிக்குள் 15 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி போடப்படும் – ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகரும் லலித் வீரதுங்க தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021

கொரோனா தடுப்பூசியை இன்னும் பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்பில் கண்டறிய பிராந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படும் என கொரோனா தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடக நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களில் பெரும்பாலானவை தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது தடுப்பூசியின் ஒரு டோஸ் மாத்திரம் பெற்றவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட 11.5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதுடன், பின்னர் 04 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட தீர்மானிக்கப்பட்டுள்ளது தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 12 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டங்களை செயற்படுத்தப்படும் போது, இலங்கையில் சுமார் 15 மில்லியன் மக்களுக்கு 2021 ஆம் ஆய்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொரோனா தடுப்பூசியைப் பெறுவது கட்டாயமாக்குவதற்கு ஒரு முடிவு எட்டப்படுமா என்பதை எதிர்காலத்தில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடல்கள் தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: