இவ்வருட இறுதிக்குள் உள்நாட்டில் 30 வீத மருந்து உற்பத்தி – சுகாதார அமைச்சு நம்பிக்கை!
Saturday, May 27th, 2023
நாட்டின் மருந்துத் தேவையில் 30 வீதத்தை இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் பல கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 வருடங்களில் நாட்டின் மருந்துகளுக்கான தேவையில் 70 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றிற்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதுகாப்பு தலைமையகக் கட்டிடத்தொகுதிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்!
சேதன உர பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு சில அமைச்சுக்கள் அமைதி காக்கின்றன – அமைச்சர் மஹி...
தமிழ் மக்களுக்கு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம் - பருத...
|
|
|


