இளைஞர் யுவதிகளுக்கு 70, 000 ஆடுகளை இலவசமாக வழங்குகிறது விவசாய அமைச்சு!
Sunday, April 16th, 2023
இந்த வருடத்தில் ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு 70, 000 ஆடுகளை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கும் கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு அந்த ஆடுகள் வழங்கப்படவுள்ளன.
தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தரமான ஆடுகளை வழங்குவதற்கும், தனியார் துறையின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் தமது அமைச்சு செயற்பட்டு வருவதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜம்னாரி, கொட்டுகச்சி, போயர் மற்றும் சானன் போன்ற உயர்தரமான ஆடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வரும் சனியன்று இந்தியா செல்கிறார் ஜனாதிபதி !
ஏழாலையில் நேற்று கைக்குண்டு மீட்பு!
இந்தியா வழங்கிய 11,000 மெட்ரிக் தொன் அரிசியை குறைந்த விலையில் விற்பனைசெய்ய நடவடிக்கை - வர்த்தக அமைச்...
|
|
|


