இளைஞரை தாக்கிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றம்!
Sunday, September 25th, 2016
ஹட்டன் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு இவரை மாற்றியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த சிகை அலங்கார நிலையத்தின் ஊழியர் ஒருவர் நேற்று தாக்கப்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts:
அர்ப்பணிப்பும் சகிப்புத் தன்மையும் மிக்க இளைஞர்களை உருவாக்குவதே எமது நோக்கம் - ஈ.பி.டி.பியின் யாழ்....
300 புகையிரதங்கள் இருந்தாலும் 130 புகையிரதங்களே சேவையில் - புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் குற்...
'சீனா எமது உயிர் தோழன் - வரலாற்றில் எவ்விடத்திலும் எம் மத்தியில் மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்ததில்லை -...
|
|
|


