இளைஞன் கடத்தல் விவகாரம் – ஹிருணிகாவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Friday, June 28th, 2024

2015 ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கருப்பு நிறத்திலான டிபெண்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்ப்பு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமால் ரணராஜாவினால் அறிவிக்கப்பட்டது.  அவர் மீதான 18 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அமில பிரியங்கர அமர சிங்க என்ற இளைஞரை, தமது பாதுகாவலர்களை ஈடுபடுத்தி, கடத்திச் சென்றதுடன் அதற்கு ஆதரவு அளித்தக் குற்றச்சாட்டின் கீழ், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 9 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை ஹிருணிகா பிரேமசந்திரவின் பாதுகாவலர்கள் ஒப்புக்கொண்டனர்.

முதல் கட்டத்திலே அவ்வாறு குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவர்களுக்கு 12 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை உத்தரவைப் பிறப்பித்த மேல் நீதிமன்ற நீதிபதி பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 2 இலட்சத்து 85,000 ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறும் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: