இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளராக சரத் ஜெயமான்னே நியமனம்!

இலங்கையின் இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி சட்டத்தரணி, சரத் ஜெயமான்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்று மாலை ஜனாதிபதியினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.சரத் ஜெயமான்னே சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆறாவது சிரேஸ்ட உறுப்பினராவார்.
ஏற்கனவே இந்தப்பதவியில் இருந்து தில்ருக்சி விக்கிரமசிங்க கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதியன்று பதவிவிலகியமையை அடுத்தே ஜெயமான்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் செய்திகள் முற்றிலும் போலியானவை - மத்திய வங்கியின் ஆளுநர் ல...
இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள் 22% இனால் அதிகரிப்பு - குறைந்த கட்டணமும் 40 ரூபாவாக நிர்ணயம்...
நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமைச்சர்கள் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இ...
|
|