இலங்கை 200 ரூபாவை கடந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!

Saturday, January 23rd, 2021

இலங்கை ரூபாய் மீதான அழுத்தம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்ககமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 194.31 ரூபாயாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 199.18 ஆக பதிவாகி உள்ளது.

எனினும் இலங்கை வர்த்தக வங்கிகள் சிலவற்றின் நாணய மாற்று வீதத்திற்கமைய ரூபாய் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ். போதனா மருத்துவமனையில் நகை திருடிய குற்றச்சாட்டு - ஒரு வழக்கில் பிணை: மற்றொரு வழக்கில் மறியல்
இரு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று : தனிமைப்படுத்தலில் 10 மருத்துவர்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் ச...
கிளிநொச்சியில் ஒரே பாடசாலையில் 71 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு - அதிக தொலைபேசி பாவனை காரணமாக இருக்க...