இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு விழா ஆரம்பம் – இந்தியாவின் 23 வான்கலன்களும் பங்கேற்பு!

Tuesday, March 2nd, 2021

இலங்கை விமானப்படையினர் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடப்படுகின்றது.

இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு நாளைமுதல் 05 ஆம் திகதிவரையில் காலிமுகத்திடலில் முதற்தடவையாக பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஒன்றும் அதேபோல வேகமாக பறத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் கூட்டொருமைப்பாட்டின் சமிக்ஞையாகவும் இராணுவ ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் தோழமையை குறிப்பிடும் முகமாக சரங் அதிநவீன இலகுரக ஹெலிகொப்டர், சூர்ய கிரண் (Hawks), தேஜாஸ் தாக்குதல் விமானம், தேஜாஸ் பயிற்சி மற்றும் டோனியர் சமுத்திர ரோந்து விமானம் ஆகியவற்றுடன் இந்திய விமானப் படையினரும் இந்திய கடற்படையினரும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினரின் 23 விமானங்கள் இந்த பாரிய நிகழ்வில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடல் வழியாக சட்டவிரோதமாக வடபகுதிக்கு வருவோரால் வடக்கில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் – எச்சரிக்கிறத...
யாழ் மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை சரியான முறையில் பின்பற்றுகின்றனர் - யாழ்ப்பாணம்...
ஓய்வூதிய பணம் பெறச்சென்ற முதியவர் வங்கியில் மரணம் – சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் சம்பவம்!