இலங்கை வரும் இந்தியர்களுக்கு புதிய விசா நடைமுறை – இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை!
Saturday, February 12th, 2022
இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு உள்வருகை விசாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்து, விஸாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்ட நிலையில், சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகைதந்ததன் பின்னர் உள் வருகை விஸாவை (ON ARRIVAL VISA) பெற்றுக்கொள்ளும் நடைமுறை இதற்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் தலைவர் கிமாலி பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போலியான தகவல்கள் பரவுகிறது - இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை!
இலங்கை - ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்!
ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் - நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு பதவியில் இருந்து விலகப் ப...
|
|
|


