இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் உள்ளது – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
Wednesday, February 15th, 2017
இலங்கை அரசு வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அது தொடர்பில் அரச தலைவரோ நிதியமைச்சரோ எந்தவித கருத்துகளையும் இதுவரை வெளியிடவில்லை என்று பொருளதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச தலைவர் பொருளாதார நிபுணர் அல்ல என்பதால், அவருக்கு நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான உண்மையான தகவல் மறைக்கப்பட்டிருக்கலாம். நிதி அமைச்சர் அல்லது நிதியமைச்சின் செயலாளரும் இது தொடர்பில் அரச தலைவருக்குத் தெரியப்படுத்தவில்லை.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அமைவாக பன்னாட்டு நிறுவனத்தால் வெகு விரைவில் இன்னும் கீழ்மட்டப் பொருளாதாரப்படுத்தலுக்குள் இணைக்கப்படும். கடன் வழங்குவதற்கு தகுதியான நாடு அல்ல எனவும் அறிவிக்கப்படும் நிலை உருவாகும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக பன்னாடுகள் அறிவிக்கும் நிலையும் காணப்படும். இவ்வாறான நிலையில் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், அதிகளவான விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவல நிலையும் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
|
|
|


