இலங்கை முதல்தடவையாக தாதியர் கற்கைப் பீடம்!

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக தாதியர் கற்கைப் பீடம் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்தவாறு நிறுவப்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் லஷ்மன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருட உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் துணைவேந்தர் பேராசிரியர் லஷ்மன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக தொழில்நுட்ப பீடம் ஒன்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதுவரை ஏழு பீடங்களில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சதொச ஊடாக குறைந்த விலையில் அரிசி வழங்க நடவடிக்கை - வர்தக அமைச்சர் பந்துல தகவல்!
சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை - மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!
|
|