இலங்கை மீது விதித்துள்ள மீன் ஏற்றுமதித் தடை யை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கம்!

Tuesday, April 19th, 2016

இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள மீன் ஏற்றுமதித் தடை அடுத்த வாரமளவில் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தத் தடை நீக்கம் குறித்த அறிவிப்பை அடுத்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றம் விடுக்கவுள்ளதாகவும் குறித்த தடைவிதிப்பின் காரணமாக சுமார் மூன்று ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையை இலங்கை எதிர்கொண்டிருந்தது.

இலங்கை மீன்பிடித் தொழிலில் சர்வதேச சட்டதிட்டங்களை மீறி நடப்பதாக குற்றம் சாட்டியே இத்தடை விதிக்கப்பட்டிருந்தது.இலங்கையின் கடல்பரப்பில் சீன மீன்பிடி வள்ளங்கள் இலங்கைக் கொடியுடன் மீன்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ச்சியாக மேற்கொண்ட கலந்துரையாடல்களின் மூலமாக மீன் ஏற்றுமதித் தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியுள்ளது.

எனினும் சர்வதேச கடல் பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது சர்வதேச சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டுமென்ற கடுமையான நிபந்தனை இலங்கை மீது விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

Related posts: