இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்கிறது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!
Saturday, April 15th, 2023
இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்வதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் உட்பட சில நாடுகளின் பங்கேற்புடன் வொஷிங்டனில் கடந்த தினம் இடம்பெற்ற மாநாடு மிகவும் முக்கியமானதாகும்.
இந்தியா, ஜப்பான் மற்றும் ப்ரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில், எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
49 முறைப்பாடுகளின் விசாரணைகள் பூர்த்தி - பிரதமர்!
மாவிட்டபுரம் கந்தசாமிகோவில் முகவுத்தரத் தேர் பவளக் கால் நாட்டுவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி!
மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு - வடமராட்சியில் சம்பவம்!
|
|
|


